டோக்யோவில் வரலாறுச் சாதனை : பி.வி.சிந்துவுக்கு வெண்கலப் பதக்கம்

இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றார். அதனை தொடர்ந்து டோக்யோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற சாதனையை படைத்துள்ளார்.

டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் காலிறுதி ஆட்டம் வரை ஒரு செட்டைக் கூட இழக்காமல் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து. உலகின் நம்பர் 1 வீராங்கனையான தைவானைச் சேர்ந்த Tai Tzu-Ying-ஐ எதிர்கொண்டார். அரையிறுதியில் பி.வி. சிந்து தோல்வியை தழுவினார்.

இந்நிலையில் இன்று மாலை நடைபெற்ற போட்டியில் சீன வீராங்கனை ஹி பிங் ஜியாவோவை வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் எதிர்கொண்டார். அற்புதமான ஷாட்களை அடித்த பி.வி.சிந்து புள்ளிகள் வித்தியாசத்தை உயர்த்தினார்.

Advertisement

21-13, 21-15 என்ற நேர் செட்களில் பி.வி.சிந்து வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதன்மூலம், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.