‘ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ திரை விமர்சனம்
மிதுன் மாணிக்கம், ரம்யா பாண்டியன் இப்படத்தில் நடித்துள்ளனர். அரிசில் மூர்த்தி இப்படத்தை இயக்கியுள்ளார். பாடகர் கிரிஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கிராமத்தில் வாழும் ரம்யா பாண்டியன் பக்கத்து ஊரை சேர்ந்த மிதுன் மாணிக்கத்தை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இவர்களின் திருமணத்திற்கு சீதனமாக இவர்கள் வளர்த்து வந்த கருப்பன், வெள்ளையன் என்ற இரண்டு மாடுகளை எடுத்து செல்கின்றனர்.
அந்த இரண்டு மாடுகளையும் குழந்தைகளை போல் வளர்த்து வருகிறார்கள். திடீரென ஒரு நாள் இரண்டு மாடுகளும் காணாமல் போகின்றன. காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர். ஆனால் அவர்கள் அந்த புகாரை ஏற்க மறுக்கிறார்கள்.
இறுதியில் மிதுன் மாணிக்கம், ரம்யா பாண்டியன் இருவரும் காணாமல் போன கருப்பன், வெள்ளையன் என்ற இரண்டு மாடுகளை கண்டுபிடித்தார்களா? இல்லையா? காணாமல் போக என்ன காரணம்/ என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் மிதுன் மாணிக்கம் யதார்த்தமான நடிப்பில் பளீச்சிடுகிறார். ரம்யா பாண்டியன், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். நண்பராக வரும் வடிவேல் முருகன், செய்தியாளராக வரும் வாணி போஜன் சிறப்பாக நடித்துள்ளனர்.
கிராமத்து பின்னணியில் அழகான கதையை எடுத்து அசத்தி இருக்கிறார்கள். படத்தின் முழு திரைக்கதையும் மாடுகளை வைத்தே செல்கிறது. கிரிஷின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாகவே கொடுத்து இருக்கிறார். சுகுமாரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தளிக்கிறது.
