விறுவிறுப்பாக துவங்கிய கிழக்கு வாசல் – ஆனால் சஞ்சீவ் நடிக்கவில்லை.. அவருக்கு பதில் இவர்!

பிரபல தயாரிப்பு நிறுவனமான ராடன் நிறுவனத்தின் தயாரிப்பில் தற்பொழுது உருவாகி வரும் சீரியல் தான் கிழக்கு வாசல். சின்னத்திரை நாடகங்களில் நடித்து வெகு நாட்கள் ஆகி நிலையில் இந்த சீரியலில் ராதிகா சரத்குமார் மற்றும் பிரபல தொகுப்பாளர் சஞ்சீவ் ஆகியோர் நடிப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டது.
மேலும் விஜயின் தந்தையாகிய எஸ்.ஏ சந்திரசேகர் அவர்களும் இந்த சீரியலில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த சீரியலுக்கான படபிடிப்பு பணிகள் துவங்கிய நிலையில் தற்பொழுது சஞ்சீவ் இந்த நாடகத்திலிருந்து விளக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து சஞ்சீவ் ஒரு தகவலை வெளியிட்டிருந்தார், அதில் இந்த நாடகத்திற்கான பூஜையில் நான் பங்கேற்றதும் ஒரு சில காட்சிகள் நடித்ததும் உண்மைதான். ஆனால் சில காரணங்களால் என்னை அந்த சீரியலில் இருந்து நீக்கி விட்டார்கள்.
ஆனால் அதற்கான காரணத்தை தற்போது நான் சமூக வலைதளங்களில் சொல்ல விரும்பவில்லை, என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் அவருக்கு பதிலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் நடித்து வரும் நடிகர் ஜீவா அந்த வேடத்தில் நடிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.