லொகேஷன் வேட்டையில் கிறுக்கல் நாயகன்.. அடுத்த பட அறிவிப்பு coming soon!

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக ஏறக்குறைய சினிமாவில் உள்ள அனைத்து துறைகளிலும் தனது ஆளுமையை நிரூபித்துக்கொண்டே இருக்கும் ஒரு சில மிகச்சிறந்த கலைஞர்களில் ராதாகிருஷ்ணன் பார்த்திபனும் ஒருவர்.
பிரபல இயக்குநர் பாக்யராஜ் அவர்களிடம் உதவி இயக்குநராக, சினிமா துறையில் களமிறங்கிய இவர் 1989ம் ஆண்டு வெளியான “புதிய பாதை” என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு இயக்குநர் அந்தஸ்துக்கு உயர்ந்தார். அன்று தொடங்கி இன்று வரை சுமார் 15 திரைப்படங்களை இயக்கி அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
இவர் இயக்கிய ஒத்த செருப்பு என்று திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது, மேலும் ஒரு இயக்குநர் தான் இயக்கிய முதல் திரைப்படத்திலேயே தேசிய விருது வாங்குவது என்பது மிகவும் அரிது, அந்த அரிதான சில மனிதர்களில் இவரும் ஒருவர்.
இறுதியாக இவர் இயக்கி வெளியிட்ட இரவின் நிழல் திரைப்படத்திற்கு இதுவரை கிடைத்த விருதுகளின் எண்ணிக்கைக்கு சரியான கணக்கு இல்லை என்றே கூறலாம். இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் பல பன்னாட்டு விருதுகளை தொடர்ச்சியாக இரவின் நிழல் திரைப்படம் பெற்று வருகிறது.
பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ள பார்த்திபன், தற்பொழுது தனது அடுத்த பட பணிகளை துவங்கியுள்ளார். அதற்கான லொகேஷன் பார்க்கும் பணிகளில் தற்பொழுது அவர் ஈடுபட்டு வருகிறார் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.