திரையுலகில் 43 ஆண்டுகாலம் நிறைவு செய்த ராதிகா: கேக் வெட்டி கொண்டாட்டம்

கடந்த 1978ம் ஆண்டில் பாரதிராஜா இயக்கத்தில் ராதிகா நடிப்பில் ‘கிழக்கே போகும் ரயில்’ படம் வெளியானது. இந்த படம் வெளியாகி நேற்றுடன் 43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. மேலும் நடிகை ராதிகா சினிமாத்துறைக்கு வந்து 43 வருடங்கள் ஆகிறது.

இதனை கொண்டாடும் விதமாக ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் 33 வது படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் படக்குழுவினர்.

tamil cinema news

‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ராதிகா கிழக்குச் சீமையிலே ,இன்று போய் நாளை வா, ஊர்காவலன் ,தாவணி கனவுகள் என பல்வேறு படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் கவனம் ஈர்த்தார்.

Advertisement

ராதிகா தற்போது இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துவரும் ‘அருண் விஜய் 33’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்புவிற்கு அம்மாவாக நடிக்கவுள்ளார்.