பிரதமர் மோடியிடம் ராகுல் காந்தி கேட்ட 4 கேள்விகள்
ரஃபேல் போர் விமானம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும் ரஃபேல் விவகாரம் தொடர்பாக தன்னுடன் 20 நிமிடங்கள் நேருக்கு நேர் விவாதம் நடத்த பிரதமர் மோடி தயாரா எனவும் கேள்வி எழுப்பினார்.
இந்திய விமானப்படைக்கு 126 போர் விமானங்கள் தேவைப்படும் நிலையில் 36 விமானங்கள் மட்டுமே வாங்கியதற்கான காரணம் என்ன?
ஒரு விமானத்தின் விலை 560 கோடி ரூபாய் என்று சொல்வதற்கு பதிலாக 1600 கோடி ரூபாய் என்று சொல்வதற்கான காரணம் என்ன?
ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ்-க்கு பதிலாக அனில் அம்பானியை தேர்வு செய்ததற்கான காரணம் என்ன?
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், ரபேல் தொடர்பான கோப்புகளை அவரது படுக்கையறையில் வைத்திருப்பதற்கான காரணம் என்ன? அதில் என்ன இருக்கிறது?
இந்த கேள்விகள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.