பாலாவிற்கு இன்ப அதிர்ச்சி.. ருத்ரன் பட இசை வெளியீட்டில் நடந்த நெகிழ்ச்சி!

கதிரேசன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் வருகின்ற தமிழ் வருட பிறப்பான ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் தான் ருத்ரன். ராகவா லாரன்ஸ், ப்ரியா பவானி சங்கர் மற்றும் சரத்குமார் போன்ற முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
சரத்குமார் இந்த திரைப்படத்தில் நெகடிவ் ரோல் ஏற்று நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, ஏற்கனவே இந்த படத்தின் ட்ரைலர் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை டேட் சென்ட்ரலில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார், வெற்றிமாறன் மற்றும் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது விஜய் டிவி புகழ் பாலா அவர்கள் தான்.
பொதுவாகவே பல தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வரும் ராகவா லாரன்ஸ், பல ஏழை குழந்தைகளை தன்னுடைய சம்பளத்தை கொண்டு படிக்கவைத்து வரும் பாலாவிற்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
ஆம், பாலாவிற்கு அவர் செய்யும் சேவையை பாராட்டி 10 லட்சம் ரூபாயை வழங்கி கௌரவித்தார் நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள்.