தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..! உங்கள் மாவட்டம் இருக்கா…

சென்னை: வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் கூறிய அறிவிப்பில், தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், அடுத்த 48 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சி, தேனி, தென்காசி கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவித்துள்ளது.

அதேசமயம் திருச்சி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மற்றும் நாமக்கல் பகுதிகளில் 104 முதல் 108 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Advertisement