இனி அரசியலுக்கு வரப்போவதில்லை – மக்கள் மன்றத்தை கலைத்தார் ரஜினி

செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து பேசினார். அப்போது மக்கள் மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு முன்பு போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு வர வேண்டும் என்பதால் ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றியிருந்தேன். ஆனால் காலசூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்தின் இந்த முடிவை ஏற்றுக்கொள்வதாக ரஜினி மன்ற நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

Advertisement