Search
Search

கிண்டல் செய்தவரையே அழைத்து பாராட்டிய ரஜினி..!

‘கோமாளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் ‘லவ் டுடே’ படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்தப் படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது.

இப்படத்தில் ராதிகா சரத்குமார், சத்யராஜ், ரவீனா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பிரதீப் ரங்கநாதன் இயக்கிய கோமாளி படத்தில் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை விமர்சனம் செய்ததாக சர்ச்சை எழுந்தது. அதன் பிறகு அந்த காட்சி நீக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். ரஜினிகாந்தை சந்தித்து பாராட்டு பெற்ற போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

You May Also Like