in

சாத்தான்குளம் சம்பவம்..! போன் காலில் இரங்கல் சொன்ன ரஜினி..!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர், சிறைச்சாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவலர்களை கைது செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் கூறி வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு, பல்வேறு பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், ரஜினி மட்டும் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என்று சிலர் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், ரஜினிகாந்த் ஜெயராஜ் குடும்பத்தினரிடம் போனில் பேசி இரங்கல் தெரிவித்ததாக, கரத்தே தியாகராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது, முந்திக்கொண்டு வந்த கருத்து சொன்ன நடிகர் ரஜினிகாந்த், தற்போது மௌனம் காப்பது ஏன் என்ற கேள்வியை அடுத்து, ரஜினி இரங்கல் தெரிவித்துள்ளார் என்று சிலர் விமர்சித்தும் வருகின்றனர்.