ரங்கா திரை விமர்சனம்

அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் சிபி சத்யராஜ், நிகிலா விமல் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரங்கா’. இந்த படத்திற்கு ராம் ஜீவன் இசையமைத்துள்ளார்.

நாயகன் சிபி சத்யராஜ் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவருக்கு சில நேரங்களில் தன்னை அறியாமலேயே அவருடைய வலது கை அவரது பேச்சை கேட்காமல் செயல்படும். அவருடைய வலது கையில் ஸ்மைலி பால் இருந்தால் மட்டுமே அந்த கை அவரது மூளைக்கு கட்டுப்பட்டு இருக்கும்.

Advertisement
ranga Movie Review Tamil

இந்நிலையில் சிபி சத்யராஜ் பணிபுரியும் அலுவலகத்திற்கு நிகிலா பணிக்கு சேருகிறார். நிகிலா தனது சிறுவயது தோழியான தெரிந்த பிறகு இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது.

திருமணம் முடிந்த கையோடு இருவரும் ஹனிமூனுக்கு செல்கின்றனர். அங்கு உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் ரகசிய கேமராக்களை வைத்து அந்தரங்க விஷயங்களை படம் எடுப்பதை சிபிராஜ் கண்டுபிடிக்கிறார். இதனால் வில்லனுக்கும் சிபிராஜுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் சிபிராஜ் வில்லன் கூட்டத்திடம் சிக்கிய பிறகு பயந்து ஓடும் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் நடித்துள்ளார். நாயகி நிகிலா விமலுக்கு சொல்லும்படியான காட்சிகள் இல்லையென்றாலும் அளவான நடிப்பை கொடுத்துள்ளார்.

வில்லனாக வரும் மோனிஷ் ரஹேகாவுக்கும் பெரிதாக காட்சிகள் எதுவும் இல்லை. சிபியின் நண்பனாக வரும் சதீஷ் சில காட்சிகளில் மட்டும் வந்து செல்கிறார்.

படத்தின் ஒரே ஆறுதல் என்னவென்றால் அது படத்தின் ஒளிப்பதிவுதான். பலவீனமான கதை மற்றும் திரைக்கதையால் படம் பார்க்கும் ஆர்வம் குறைந்துவிடுகிறது.

மொத்தத்தில் ரங்கா – சொதப்பல்