இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு?

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகியதைத் தொடர்ந்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளில் அதிபர் கோட்டாபய தீவிரம் காட்டி வருகிறார்.

world news in tamil

அந்த வகையில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை, பிரதமர் பதவியை ஏற்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்து அதனை தவிர்த்தார்.

இலங்கை முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, அதிபர் கோட்டாபயவை சந்தித்துப் பேசியுள்ளார்.

Advertisement

புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இன்று அல்லது நாளை பதவியேற்கக்கூடும் என இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.