தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் : 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் வட தமிழக கடலோர பகுதிகளில் மழை அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. சென்னையிலிருந்து தென்கிழக்கில் 340 கிலோ மீட்டர் தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain news today tamil

இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கும் புதுச்சேரிக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement