தயாரிப்பாளருடன் மோதல்… எஸ்.ஜே.சூர்யாவுக்கு ரெட் கார்டு கொடுக்க திட்டம்..!
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் அஜித்தை வைத்து வாலி, விஜய்யுடன் குஷி போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தார்.
இயக்குனராக வலம் வந்த எஸ்.ஜே.சூர்யா தற்போது முழுநேர நடிகராக மாறியுள்ளார். குறிப்பாக இவர் வில்லனாக நடிக்கும் படங்கள் சக்கைப்போடு போடுவதால் எஸ்.ஜே.சூர்யாவுக்கு தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்கள் குவிந்து வருகின்றன.

எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்த மெர்சல், ஸ்பைடர், மாநாடு போன்ற படங்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்ததால், தற்போது மார்க் ஆண்டனி, ஆர்.சி.15 போன்ற படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்காக கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் நடிக்க எஸ்.ஜே.சூர்யாவுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஏற்பட்ட பிரச்சனையால் ஞானவேல் ராஜா, எஸ்.ஜே.சூர்யா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கும் முடிவுக்கு வந்துள்ளாராம்.
இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வடிவேலு இப்படி தயாரிப்பாளருடன் மோதி பிரச்சனையில் சிக்கி ரெட் கார்டு கொடுக்கப்பட்டு அவர் படங்களில் நடிக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
