கொழுப்பை குறைக்க உதவும் எளிய உணவுகள்

நம் உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பை குறைப்பதற்கான உணவு வகைகள் என்ன என்பதை பார்ப்போம்.

பூண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்து சீராக வைக்க உதவும்.

நார்ச்சத்து அதிகம் உள்ள கத்திரிக்காயை உணவாக உட்கொண்டால் நமது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் மிக விரைவாக உறிஞ்சப்பட்டு குறைக்கப்படும்.

சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைக்க உதவும். மேலும் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை அவ்வப்போது சாப்பிடுவது நல்லது.

மீனில் செரிவூட்டப்படாத கொழுப்பு மற்றும் அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அதிலும் சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி மீன்களை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

கிரீன் டீயில் வைட்டமின் சி உள்ளது. எனவே காபி குடிப்பதற்கு பதிலாக தினமும் க்ரீன் டீயை குடித்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்துவிடும்.

தானியங்களில் உள்ள கார்போஹைட்ரேட் நீண்ட நேரம் பசியெடுக்காமல் தடுக்கும். இதனால் உடல் எடை குறைக்க உதவும்.

ஆப்பிளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கனிம சத்துக்கள், பெக்டின் என்னும் பொருளும் உள்ளதால் இவை கொழுப்பு செல்களை உறிஞ்சி உடலில் இருந்து வெளியேற்றிவிடும். இதேபோல் அன்னாசிப்பழத்தை சாப்பிடுவதும் உடல் எடையை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும்.

இஞ்சியை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும். அரை டீஸ்பூன் இஞ்சி பொடியை ,சுடுநீரில் கலந்து சிறிதளவு தேன் சேர்த்து குடித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து விடும்.