ஜியோவின் அடுத்த அதிரடி – ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை

ஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
ஏற்கனவே, ஜியோ செயலிகளில் ஹெச்டி வீடியோ கால்கள் பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது மேலும், அதன் புதிய தளத்தில் இந்திய பிரபலங்களுக்கு வீடியோ கால் செய்யும் சேவையை வழங்குகிறது.
ஜியோவிடம் 18.6 கோடி வாடிக்கையாளர்களையும், சுமார் 15 கோடி ஸ்மார்ட்போன் பயனர்களை கொண்டுள்ளது என அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புது தளத்தின் அறிமுகம் பிரான்டுகளை ஊக்குவிக்கவும், புதிய திரைப்படங்களை விளம்பரப்படுத்தவும், முன்னணி தளமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
வரும் நாட்களில் ஜியோ இன்டெராக்ட் தளத்தில் வீடியோ கால், புக்மைஷோ மூலம் திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு, கேள்விகளில் இருந்து பாடம் கற்கும் முறை போன்ற பல தரப்பட்ட சேவைகளை வழங்கும் என ஜியோ வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.