பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் – ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

கொரோனாவை கட்டுப்படுத்த தவறிய பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என ட்விட்டரில் #ResignModi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவி வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. சில இடங்களில் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருவதுடன், படுக்கைகள் நிரம்பி வழிகிறது. இந்த நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த தவறிய பிரதமர் பதவி விலக வேண்டும் என சமூக வலைதளமான ட்விட்டரில் #ResignModi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.