Connect with us

TamilXP

பின்னோக்கி நடைப்பயிற்சி செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

மருத்துவ குறிப்புகள்

பின்னோக்கி நடைப்பயிற்சி செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

பின்னோக்கி நடைப்பயிற்சி செய்வதால் உடல் இயக்கங்கள் ஒருங்கிணைப்புடன் நடைபெறும். ஒட்டுமொத்த மனநிலையை மேம்படுத்தும். காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி செய்வது பெரும்பாலானோரின் அன்றாட வழக்கமாக இருக்கிறது.

தினமும் ஒரே விதமாக நடைப்பயிற்சியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும்போது சிலருக்கு சலிப்பு ஏற்படுகிறது. அதை தவிர்க்க வாரத்தில் சில நாட்கள் பின்னோக்கி நடைப்பயிற்சி செய்யலாம். இதை 20 நிமிடங்கள் செய்தால் போதும். அந்த பயிற்சிகளில் உடலுக்கும், மனதுக்கும் நலம் சேர்க்கும் ஏராளமான விஷயங்கள் உள்ளன.

இரவில் சுழற்சி அடிப்படையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் தூக்கம் சீராக வரவும் வழிவகை செய்யும். சிந்தனை திறனை மேம்படுத்த உதவும். மனதில் நல்ல யோசனைகள் உதிக்கும். பார்வை திறன் மேம்படும்.

பின்னோக்கி நடைப்பயிற்சி செய்வதால் கால் தசைகளின் வலிமை அதிகரிக்கும். முழங்கால் காயங்களால் அவதிப்படுபவர்கள் பின்னோக்கி நடைப்பயிற்சி செய்வது நல்லது. இதனால் விரைவில் காயங்கள் ஆறத் தொடங்கும்.

அதிக கலோரிகளை எரிக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும் பின்னோக்கி நடைபயில்வது பயனளிக்கிறது.

எலும்புகளும், தசைகளும் வலுப்பெறுவதற்கும் பின்னோக்கி நடைப்பயிற்சி செய்வது நல்லது. உடலின் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கும். வீட்டிலேயே பின்நோக்கி நடைப்பயிற்சி செய்ய விரும்புபவர்கள் டிரெட்மில் பயன் படுத்தலாம். அது சௌகரியமாகவும், பாதுகாப்பாகவும் அமையும். முதலில் டிரெட்மில்லில் மெதுவாக நடக்க துவங்கி பின்னர் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in மருத்துவ குறிப்புகள்

To Top