அட இதுதான் காரணமா? : ரோபோ ஷங்கரின் மெலிந்த தேகம் – உண்மையை போட்டு உடைத்த மனைவி

மேடை நாடகங்களில் உடல் முழுக்க சாயத்தை பூசிக்கொண்டு, ரோபோவாக நடித்து அதன் பிறகு சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் தான் ரோபோ சங்கர். அவர் முதன் முதலில் நடித்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாபெரும் வெற்றி பெறமான படையப்பாவில் தான்.
அந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தை ஏற்ற அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக அவருடைய உடல் எடை குறைந்து வருவதைக் கண்டு அவருடைய ரசிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சிலர் இதற்கு காரணம் அவருக்கு வந்துள்ள ஒரு அரியவகை நோய் என்று கூற, பலர் அவர் தொடர்ச்சியாக மது அருந்தி வருவதால் தான் அவர் உடல்நிலை இந்த அளவுக்கு மோசமாகியுள்ளது என்று கூறியுள்ளனர். ஆனால் பரவி வரும் வதந்திகளுக்கு தற்பொழுது அவருடைய மனைவி பிரியங்கா ரோபோ சங்கர் ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஒரு காணொளியில், எனது கணவருக்கு எந்த விதமான உடல் நோயும் இல்லை அவர் பூரண சுகத்துடன் நல்ல உடல் வலிமையுடன் இருக்கிறார். ஆனால் அவர் தற்பொழுது நடித்துவரும் ஒரு படத்திற்காக இந்த எடை குறைப்பு தேவைப்படுவதால் அவர் தன்னுடைய எடையை தொடர்ச்சியாக குறைத்து வருகிறார்.
இதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்று ஆணித்தரமாக கூறியுள்ளார். அவருடைய ரசிகர்கள் அவருடைய புகைப்படங்களை பார்த்து வருந்துவதற்கு எந்த அவசியமும் இல்லை என்றும் அவர் நலமுடன் இருக்கிறார் என்றும் அவருடைய ரசிகர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.