ஆபாச நாயகி ரவுடி பேபி சூர்யா மதுரையில் கைது

சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசி வந்த ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது காதலன் சிக்கா ஆகியோர் மதுரையில் கைது செய்யப்பட்டனர்.

யூடியூபில் கவர்ச்சி காட்டுவது, ஆபாச வார்த்தைகள் பேசுவது என அருவருக்கத்தக்க வகையில் விடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா. ரவுடி பேபி, சிக்கா இணையதளங்களை முடக்க வேண்டும் என தொடர்ச்சியாக புகார்கள் கொடுக்கப்பட்டு வந்தன.

ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு வருவது ஆன்லைனில் பாடம் கற்கும் மாணவர்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறது. எனவே ரவுடிபேபி சூர்யா, சிக்கா ஆகியோர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்தனர்.

Advertisement

இந்நிலையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

இதனையடுத்து மதுரையில் பதுங்கி இருந்த ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது கணவர் சிக்கந்தர் இருவரையும் இன்று கைது செய்து கோவைக்கு கொண்டு வந்தனர். தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரவுடி பேபி சூர்யா திருச்சியில் சில மசாஜ் சென்டர்கள் ஸ்பா என்ற பெயரில் விபச்சார தொழில் ஈடுபட்டு கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.