ஒரு வீடும், வேலையும் கொடுங்க. இல்லைனா தீக்குளிப்பேன் – ரவுடி பேபி சூர்யா அட்டகாசம்

எனக்கு வீடு, வேலைவாய்ப்பை கொடுங்கள். இல்லாவிட்டால் நான் தப்பான வழிக்குத்தான் போவேன் என ரவுடி பேபி சூர்யா தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.

ஆபாச பேச்சு காரணமாக ரவுடி பேபி சூர்யாவின் யூடியூப் சேனலை முடக்க வேண்டும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுகுறித்து சுப்புலட்சுமி என்கிற ரவுடி பேபி சூர்யா சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “நான் ஆபாசமாக பேசியதாக எனது சேனலை முடக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்கள். இதுகுறித்து என்னிடம் போலீஸார் விளக்கம் கேட்டுள்ளனர். நான் எல்லாருக்கும் சொல்லி கொள்வது என்னவெனில் எனது யூடியூப் சேனலை முடக்கினால் என் வீடியோவை வைத்து சம்பாதித்த அனைவரின் சேனல்களையும் முடக்க வேண்டும்.”

Advertisement

நான் இனி யூடியூப் சேனலில் ஆபாசமாக பேச மாட்டேன். என்னை ஆபாசமாக பேச தூண்டியது யார்? அவர்கள் தூண்டியதால்தான் பேசினேன். என் குழந்தையை கேவலமாக பேசினார்கள், அதனால் நானும் அசிங்கமாக பேசினேன். இதில் என்ன தவறு? நான் 7ஆம் வகுப்பு வரைதான் படித்துள்ளேன். எனக்கு அரசு சார்பில் வீடு, வேலைவாய்ப்பு தர வேண்டும். இல்லாவிட்டால் நான் தவறான பாதைக்குத்தான் செல்வேன். அப்போது போலீஸார் என் மீது வழக்கு தொடுத்தால் நான் தீக்குளிப்பேன் என ரவுடி பேபி சூர்யா தெரிவித்துள்ளார்.