ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்றிய 2.6 லட்சம் பேர்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் ராஜ்தீப் ரத்தோட். இவருடயை 5 மாத ஆண் குழந்தைக்கு மிகவும் அபூர்வமான மரபணு கோளாறுடைய ‘Spinal Muscular Atrophy Type I’ என்ற நோய் தாக்கியிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். உடனே குழந்தையை மும்பையில் உள்ள ரஹஜா மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சிகிச்சைக்குத் தேவையான மருந்து அமெரிக்காவில்தான் கிடைக்கும், ஆனால், அதன் ஒரு டோஸ் விலை ரூ.16 கோடி.

பின்னர், பொதுமக்களிடம் ஆன்லைன் மூலம் நிதியுதவி திரட்டப்பட்டது. 42 நாட்களில் மொத்தம் 16 கோடி நிதி வசூலானது, 2.6 லட்சம் பேர் இதனை வழங்கியுள்ளனர், உடனே அமெரிக்காவில் இருந்து மருந்து இறக்குமதி செய்யப்பட்டு வெற்றிகரமாக குழந்தைக்கு செலுத்தியுள்ளனர்.

People Donate ₹ 16 Crore For Mumbai Child Who Needed Most Expensive Drug

இதுகுறித்து குழந்தையின் தந்தை ராஜ்தீப்சிங் கூறுகையில், “எனது மகனை சாமான்ய மக்கள் ஒன்று சேர்ந்து காப்பாற்றி உள்ளனர்” என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Advertisement

மேலும், ஹிந்துஜா மருத்துவமனையின் குழந்தைகள் நரம்பியல் நிபுணர் டாக்டர் நீலு தேசாய் கூறுகையில் “இந்த நோய்க்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கவில்லை என்றால் குழந்தையின் உயிருக்கே ஆபத்தாகிவிடும். பொதுவாக இந்த நோய் 10 ஆயிரம் குழந்தைகளில் ஒருவருக்கு வர வாய்ப்பு உள்ளது. வருடத்தில் 4 அல்லது 5 குழந்தைகள் இது போன்ற பிரச்னையால் சிகிச்சைக்கு வருகின்றன. இந்த நோய்க்கு மூன்று வகையான சிகிச்சைகள் இருக்கிறது. ஆனால் மூன்று வகையான சிகிச்சையும் அதிக செலவு பிடிக்கக்கூடியது” என தெரிவித்தார்.