ரூபாய் 51 கோடி கடன் பாக்கி – அதிர்ந்து போன டீக்கடைக்காரர்

அரியானா மாநிலத்தில் ராஜ்குமார் என்பவர் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். ஊரடங்கு காரணமாக தனது டீ கடையை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் அவருடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

தனது கடையை மீண்டும் திறப்பதற்காக ரூபாய் ஐம்பதாயிரம் கடன் கேட்டு வங்கி ஒன்றிற்கு சென்றுள்ளார். அவருடைய ஆவணங்களை சரிபார்த்த வங்கி அதிகாரிகள், நீங்கள் ஏற்கனவே வங்கியில் 51 கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளீர்கள். இப்போது மேலும் கடன் கேட்டால் எப்படி தர முடியும்? முதலில் அந்த 51 கோடி ரூபாய் கடன் பாக்கியை கட்டுங்கள். என வங்கி அதிகாரி கூறியுள்ளார்.

இதைக் கேட்ட டீக்கடைக்காரர் ராஜ்குமாருக்கு தூக்கி வாரிப் போட்டது. இதுவரை எந்த வங்கியிலும் நான் கடன் வாங்கியது இல்லை. அப்படி இருக்க நான் எப்போது 51 கோடி கடன் வாங்கினேன் என்று எனக்கே தெரியவில்லை. என ராஜ்குமார் புலம்பி உள்ளார்.