மோகன்.ஜி யின் ருத்ர தாண்டவம் படத்திற்கு கட் போட்ட சென்சார் போர்டு

திரௌபதி படத்தை தொடர்ந்து மோகன்.ஜி ருத்ர தாண்டவம் படத்தை இயக்கிவருகிறார். திரௌபதி படத்தின் அதே குழுவினர் இந்த படத்திலும் இணைத்துள்ளனர். ‘திரெளபதி’ பட நாயகன் ரிச்சர்ட் ரிஷி தான் இந்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார்.

குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா இந்த படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் இயக்குனர் கவுதம் மேனன், ராதாரவி, மாளவிகா அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து அடுத்தகட்ட பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் படத்தை சென்சாருக்கு அனுப்பி உள்ளனர். இந்த படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் ஒரு சில கட்டுகளுடன் படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

Advertisement

ருத்ர தாண்டவம் படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.