500 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய சல்மான் கான் : கொண்டாடும் ரசிகர்கள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 500 ஆக்சிஜன் செறிவூட்டிகளை பாலிவுட் நடிகர் சல்மான் கான் வழங்கியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுப்பதால் அதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் போராடிவரும் சூழலில் பாலிவுட் நட்சத்திரங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். இதில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் மருத்துவ உபகரணங்கள் மற்றும் பல அத்தியாவசிய விஷயங்களை ஏற்பாடு செய்து வருகிறார்.

ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். எங்கள் முதல் 500 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மும்பையை அடைந்துள்ளன. இந்த ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் தேவைப்படும் போது 8451869785 என்ற எண்ணில் அழைக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

Advertisement

இவருடைய இந்த ஏற்பாடு நல்ல வரவேற்பை பெற்றதால் ரசிகர்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த ‘ராதே: யுவர் மோஸ்ட் வாண்டட் பாய்’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.