“அதுக்கும் கொஞ்சம் சென்சார் வைங்கப்பா”.. நச்சுனு கேட்ட சல்மான் கான்!

சல்மான் கான், தமிழ் திரையுலகில் மிக பெரிய அளவில் ரசிகர்கள் இல்லை என்றாலும் பாலிவுட் உலகின் உச்ச நட்சத்திரங்களில் இவரும் ஒருவர். சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு துவனாகியது இவருடைய திரைப்பயணம்.
எனக்கு தெரிந்து இவர் ஹிந்தியை தவிர்த்து நேரடியாக வேறு மொழி படங்களில் நடித்ததில்லை என்று தான் கூறவேண்டும். இறுதியாக சென்ற ஆண்டு ஷாருக் கான் நடிப்பில் வெளியான பட்டான் படத்தில் டைகர் என்ற கதாபாத்திரத்தில் தோன்றி நடித்தார்.
அவருக்கு என்று ஒரு தனி ஸ்டைல் எப்போதுமே இருக்கும், இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு OTT குறித்து இவர் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். OTTயில் வெளியாகும் வெப் சீரிஸ் போன்ற படங்களுக்கு சென்சார் கிடையாது.
ஆகையால் கெட்ட வார்த்தைகள், ஆபாச காட்சிகள் மற்றும் போதை பொருள் உட்கொள்ளும் காட்சிகள் இதில் இடம்பெறுவதை தடுக்க முடியாது. அதே நேரம் ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் OTTயில் வெளியாகும் அனைதயும் எளிதில் பார்த்துவிடலாம். ஆகையால் இது 16 வயதிற்கு கீழ் உள்ளவர்களை எளிதில் பாதிக்கும் தன்மைகொண்டது என்று கூறியுள்ளார் சல்மான்.
மேலும், நிச்சயம் OTTக்கும் தணிக்கை குழு அமைத்து அவை தணிக்கை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். நல்ல முயற்சி தான்.