உப்பை அதிகம் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்

உடல் ஆரோக்கியத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தி மிக மிக முக்கியமானது. நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க வேண்டும் என்பதில் அனைவரும் கவனமாக இருக்கிறார்கள். அதற்கு உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.

உப்பில் உள்ள சோடியம் குளோரைடு ரத்த அழுத்தத்தை உயர்த்தும். அது இதய நோயை உருவாக்கும். நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு உப்பு நல்லதல்ல என ஆராய்ச்சி ஒன்றில் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பான் பல்கலைக் கழகம் ஆய்வு ஒன்று மேற்கொண்டுள்ளது. அதில் அதிகப்படியான உப்பு சேர்த்துக் கொள்வது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் கட்டமைப்பையே பலவீனப்படுத்தும் என்று கூறியுள்ளது.

தினமும் ஒருவர் 5 கிராம் அளவுக்கு மேல் அதிகமாக உப்பு சேர்க்கக்கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அவர்கள் கூறுகையில் ஆய்வுக்காக தினசரி சாப்பிடும் உப்பின் அளவு உடன் கூடுதலாக 6 கிராம் சேர்த்து சிலரே சாப்பிட வைத்தோம்.

துரித உணவுகளான பர்கர் மற்றும் பொறித்த உணவுகளில் உப்பை அதிகம் சேர்த்து சாப்பிட வைத்தோம். ஒரு வாரம் கழித்து ரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தபோது அவர்களின் நோய் எதிர்ப்பு செல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது தெரியவந்தது என்கிறார்கள்.

உப்பில் உள்ள அதிகப்படியான சோடியம் பல்வேறு பாதிப்புகளை உருவாக்கும். குறிப்பாக சிறுநீரகங்கள், மூளை மற்றும் ரத்த நாளங்களை பாதிப்புக்குள்ளாக்கும். மன அழுத்தம், உடல் பருமன் போன்ற பிரச்சினைகளையும் உருவாக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Recent Post