கோமாளி பட நடிகைக்கு கொரோனா தொற்று

கோமாளி படத்தில் நடித்த நடிகை சம்யுக்தா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதில் சினிமா துறை மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாட்ச்மேன், கோமாளி படங்களில் நடித்த நடிகை சம்யுக்தா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tamil cinema news

முன்னதாக ஏப்ரல் மாதத்தில், அவர் பெற்றோருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. வீட்டில் சிகிச்சை பெற்று வரும் தனது பெற்றோரை கவனித்துக்கொண்டார்.

மருத்துவரின் ஆலோசனையின் படி தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் “என் பெற்றோரும் நன்றாக குணமடைந்து வருகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.