சங்கத்தலைவன் திரை விமர்சனம்

சமுத்திரக்கனி, கருணாஸ், விஜே ரம்யா, சுனுலக்ஷ்மி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். மணிமாறன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

கருணாஸ் ஒரு ஃபேக்டரியில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். மாரிமுத்து இந்த ஃபேக்டரியை நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் விபத்து ஏற்பட்டு ஒரு பெண்ணின் கை துண்டாகிறது.

பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு நஷ்ட ஈடு வழங்காமல் அந்த பெண்ணை ஏமாற்ற நினைக்கிறார்கள் மாரிமுத்து. இந்த பிரச்சனையை கருணாஸ் சமுத்திரகனியிடம் தெரிவிக்கிறார்.

Advertisement

கம்யூனிசத்தை சேர்ந்த சமுத்திரக்கனி நெசவுத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவராக உள்ளார். பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிற்கு நஷ்ட ஈடு முறையாகப் பெற்று கொடுக்கிறார். இந்தப் பிரச்சனையை சமுத்திரகனியிடம் எடுத்துச் சென்றது கருணாஸ் தான் என மாரிமுத்து தெரியவருகிறது. அதன் பிறகு கருணாஸ் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதுதான் படத்தின் மீதி கதை.

கருணாஸ் இப்படத்தில் காமெடி, வேகம், துணிச்சல், ஏக்கம் என பல கோணங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

பல போராட்டங்களை சந்திக்கும் அப்பாவி பெண்ணாக சுனுலக்ஷ்மி நன்றாக பொருந்துகிறார். விஜே ரம்யா மற்றும் விக்ரம் ஆனந்த் தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கின்றனர்.

சமுத்திரக்கனி கம்யூனிசத்தின் பெருமைகளையும் யாருக்காக போராட வேண்டும் என்ற விளக்கத்தையும் மக்களுக்கு புரிய வைக்கிறார். ஃபேக்டரி உரிமையாளராக நடித்திருக்கும் மாரிமுத்துவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

ரசிகர்களுக்கு ஏற்கனவே தெரிந்த கம்யூனிஸ சித்தாந்தங்களை மீண்டும் சொல்லியிருக்கிறார்கள். போராட்டம், முதலாளித்துவம், தொழிலாளித்துவம், கம்யூனிசம் என பல படங்களில் பார்த்த கதை என்பதால் படம் சற்று அலுப்பு தட்டுகிறது.

சித்தாந்தங்களில் சொல்வதில் காட்டிய அக்கறை திரைக்கதையில் காட்டி இருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

சங்கத்தலைவன் – புதிதாக எதுவும் இல்லை