Search
Search

நக்கல் மன்னன் வந்தாச்சு.. DD Returns – வெளியான டைட்டில் மற்றும் டீசர்!

சந்தானம், இவர் ஹீரோவாக களமிறங்கிய பிறகு பல விமர்சனங்களை எதிர்கொண்டார். ஆனால் ஒரு நடிகன் எந்த பாதையில் செல்லவேண்டும் என்று முடிவு செய்வது அவரது விருப்பம். இவர் ஜோடிபோட்டு நடிக்காத ஹீரோக்களே இல்லை என்ற ஒரு நிலை வந்த பிறகே கதையின் நாயகனாக முடிவெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில வருடங்களுக்கு முன்பு தில்லுக்கு துட்டு படத்தின் முதல் பாகம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு 2019ம் ஆண்டு அந்த படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் DD Returns அதாவது Dare Devil Returns என்ற தலைப்பில் ஒரு புதிய ஹாரர் காமடி திரைப்படம் தற்போது உருவாகி வருகின்றது. இன்று அந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது, வழக்கமான சந்தானத்தின் நக்கல் சற்று எட்டிப்பார்க்கிறது என்று தான் கூறவேண்டும்.

தில்லுக்கு துட்டு இரு பாகங்களையும் ராம் பாலா இயக்கிய நிலையில் இந்த DD Returns படத்தை பிரேம் ஆனந்த் இயக்கவுள்ளார். இன்னும் சில மாதங்களில் இந்த படம் வெளியாகவுள்ளது.

You May Also Like