சப்போட்டா பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

சப்போட்டா மரம் உறுதியான நீடித்து வாழும் மரம். இது முதன் முதலில் மத்திய அமெரிக்காவில் தோன்றி, பிறகு மேற்கிந்திய தீவுகளுக்கு 15-ம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1898-ல் இந்தியாவில் மகாராஷ்டிராவில் சப்போட்டா அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது தமிழ்நாடு, ஆந்திரா, மேற்கு வங்காளத்தில் சப்போட்டா பயிரிடப்படுகிறது.

சப்போட்டா மரம் எல்லாவித மண்ணிலும் வளரக்கூடியவை. இந்தியாவில் 5000 ஹெக்டேரில் சப்போட்டா பயிரிடப்படுகிறது. மரத்தை நட்டவுடன் மூன்று வருடங்கள் கழித்து பலனளிக்கும். ஒரு மரத்தில் இருந்து சராசரியாக 2000 பழங்கள் கிடைக்கும்.

சப்போட்டா பழம் மூல வியாதிக்கு சிறந்தது. எலும்பு மற்றும் பற்களுக்கு வலிமை தரும். நரம்பு தளர்ச்சியை போக்கும். இருமல், தொண்டை புண்ணிற்கு சப்போட்டா பழம் நல்ல மருந்தாகும்.

சப்போட்டா பழம் சாப்பிடுவதால் உடல் வலிமையைக் கூட்டும். ரத்தத்தை சுத்திகரிக்கும். குழந்தைகளுக்கு மூளையை மேம்படுத்தும். சிறுநீர் பிரிய உதவும். சப்போட்டா பழம் இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும்.

சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி குணமாகும்.சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்று நோய் ஏற்படாது. தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் எலும்புகள் வலுவடையும், சருமம் பளபளப்பாகும்.

சப்போட்டா பழச்சாறுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் சளித்தொல்லை நீங்கும். சப்போட்டா பழத்தில் இருந்து குளுக்கோஸ் மற்றும் பெக்டின் தயாரிக்கப்படுகிறது. தோல் பதனிடும் தொழிலில் மரப் பட்டையில் இருந்து கிடைக்கும் வேதிப்பொருள் பயனாகிறது .

மேலும் அனைத்து பழங்களின் மருத்துவ குணங்கள் பற்றி இங்கு காணலாம்.