ஓ.டி.டியில் வெளியாகும் ஆர்யாவின் சார்பட்டா! – ரிலீஸ் தேதி அறிவிப்பு

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி போன்ற படங்கள் மூலமாக தமிழ் திரையுலகில் பிரபலமானவர் இயக்குனர் பா.ரஞ்சித். பிறகு இவரது தயாரிப்பில் வெளிவந்த பரியேறும் பெருமாள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

தற்போது ஆர்யா நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவரப்போகும் படம்தான் ‘சார்பட்டா பரம்பரை’. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஆர்யா, துஷாரா, கலையரசன், பசுபதி, சுந்தர், ஜான் விஜய், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஆர்யாவின் சர்பட்டா 2021 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவடைந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக, நாடு முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக ஓ.டி.டியில் வெளியாகவிருப்பதாக ஏற்கனவே தகவல் வெளிவந்தது.

Advertisement

இந்நிலையில் ஜூலை 22 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ‘சார்பட்டா பரம்பரை’ வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.