சார்பட்டா பரம்பரை திரை விமர்சனம்

ஆர்யா, துஷாரா, கலையரசன், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். பா.ரஞ்சித் இப்படத்தை இயக்கியுள்ளார். “K9 Studios” மற்றும் “நீலம் புரடொக்‌ஷன்ஸ்” இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

வடசென்னை பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலுக்குள் பிரிக்க முடியாத விளையாட்டாக இருக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளார்கள்.

sarpatta parambarai movie review in tamil

சார்பட்டா பரம்பரையும் இடியாப்ப பரம்பரையும் கால காலமாக மோதி வருகிறது. ஆரம்பகாலத்தில் கை ஓங்கி நின்று சார்பட்டா பரம்பரை இடியாப்ப பரம்பரையிடம் தோற்றுக்கொண்டே வந்தது.

Advertisement

கடைசியாக ஒரு சண்டை இதில் நான் தோற்றால், சார்பட்டா பரம்பரை இனி களத்தில் இறங்காது என பசுபதி சவால் விடுகிறார். அதன் பிறகு பாக்ஸிங் அனுபவமே இல்லாத கபிலன் (ஆர்யா) களத்தில் இறங்குகிறார். சார்பட்டாவின் சாம்பியனாக வந்து இடியப்ப பரம்பரையின் பாக்ஸரான வேம்புலியுடன் (ஜான் கொக்கன்) மோதுகிறார். இறுதியில் யார் வென்றர்கள்? சார்பட்டா பரம்பரைக்காக வெற்றியை தேடி தந்தாரா? என்பதுதான் படத்தின் கதை.

கபிலனாக ஆர்யா முறுக்கேறிய உடம்புடன் வந்து நிற்கிறார். இன்னும் 10 பேரை அவர் அடித்தால் கூட நம்பலாம் என்பது போல் உள்ளது. தனது யதார்த்தமான நடிப்பில் அசத்தியுள்ளார்.

கதாநாயகியாக வரும் துஷாரா விஜயன் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்.

சார்பட்டா பரம்பரையின் பாக்ஸிங் வாத்தியாராக வரும் பசுபதி அந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக உள்ளார். தன் பரம்பரை மானத்தைக் காக்க பசுபதி எடுக்கும் முடிவுகளும், முயற்சிகளும் படத்தின் முதல் பாதியை கொண்டு செல்கிறது.

பரபரப்பான சுவாரஸ்ய காட்சிகளுடன் படம் நகர்கிறது. அந்தக் கால பாக்ஸிங் முறை, அதிலிருக்கும் நுணுக்கங்கள் என திரையில் காட்டுவதற்கு கடுமையாக உழைத்திருக்கிறார்கள். படத்தின் முதல் பாதியும் இரண்டாம் பாதியும் சீரான வேகத்தில் செல்கின்றன.

சென்னை தமிழ் பல வசனங்கள் புரியவில்லை. பாடல்கள் பெரிதாக இல்லாவிட்டாலும் சண்டைக் காட்சிகளில் வரும் பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கிறது.