Search
Search

“ஒற்றை ராஜாவாக போராடும் நாயகன்”.. வித்தைக்காரன் அவதாரம் எடுக்கும் சதீஷ்!

சேலத்தில் பிறந்து படிப்பின் மீது பெரிய அளவில் ஆர்வம் இல்லாத காரணத்தினால் தனது 14 வயதிலேயே மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கிய ஒரு சிறந்த நடிகர் தான் சதீஷ். அய்யா கிரேசி மோகன் அவர்களுடைய நாடகங்களில் கடந்த 2001ம் ஆண்டு இவர் நடிக்க துவங்கினார் அப்போது இவருக்கு வயது 14.

தொடர்ச்சியாக பல மேடை நாடகங்களில் நடித்து வந்த இவருக்கு, முதன் முதலில் கிடைத்த சினிமா வாய்ப்பு தான் ஜெர்ரி என்ற திரைப்படம். இந்த திரைப்படம் 2006ம் ஆண்டு கிரேசி மோகன் அவர்களுடைய எழுத்தில் வெளியான ஒரு திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு ஒன்பது ரூபாய் நோட்டு என்ற திரைப்படத்தில் நடித்த சதீஷ் சில ஆண்டுகள் திரைத்துறைக்கு ஓய்வு கொடுத்தார். மீண்டும் 2010ம் ஆண்டு சி.எஸ் அமுதன் இயக்கத்தில் வெளியான சிவாவின் “தமிழ் படம்” இவருக்கு ஒரு நல்ல திருப்புமுனையை கொடுத்தது.

மதராசபட்டினம், மெரீனா, மாலைப்பொழுதின் மயக்கத்திலே, தாண்டவம் மற்றும் எதிர்நீச்சல் உள்ளிட்ட பல படங்கள் இவரின் வெற்றிப்பாதைக்கு வழி வகுத்தது. இறுதியாக வாரிசு திரைப்படத்தில் விஜய் அவர்களின் நண்பனாக தோன்றிய இவர் கண்ணை நம்பாதே திரைப்படத்திலும் நடித்திருந்தார்,

அவ்வப்போது ஒரு சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வரும் சதீஷ், தற்பொழுது வெங்கி என்ற இயக்குனர் இயக்கத்தில் வெளியாகவுள்ள வித்தைக்காரன் என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது இந்த படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

You May Also Like