கவினுடன் இணையும் அயோத்தி நாயகி.. இயக்குநர் அவதாரம் எடுக்கும் சதீஷ்!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வெற்றி பெற்று, அதன் பிறகு திரைத்துறையில் நுழைந்தவர் தான் பிரபல நடிகரும், நடன இயக்குனருமான சதீஷ் அவர்கள்.
கடந்த 2007ம் ஆண்டு வெளியான “உன்னாலே உன்னாலே” திரைப்படத்தில், ஹீரோவிற்கு நண்பராக தோன்றி நடித்திருந்தார். அதன் பிறகு “வாரணம் ஆயிரம்” திரைப்படத்திலும் சூர்யாவினுடைய நண்பராக நடித்திருந்தார்.
அதன் பிறகு அவ்வப்போது நல்ல பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வரும் இவர், இறுதியாக சொப்பன சுந்தரி திரைப்படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் பல பாடல்களுக்கு நடன இயக்குனராகவும் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் நடனம் மற்றும் நடிப்பு என்று இவை இரண்டையும் தாண்டி மூன்றாவதாக படத்தின் இயக்குனராக களமிறங்க உள்ளார் சதீஷ். இவர் இயக்கவிருக்கும் படத்தில் பிரபல நடிகர் கவின் மற்றும் அயோத்தி படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை ப்ரீத்தி அஸ்ராணி உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.
இந்த படத்தின் டைட்டில் மற்றும் பிற தகவல்கள் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதிக்குள் துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.