கங்கை நதியை காப்பாற்ற 40 நாளாக உண்ணாவிரதம் இருக்கும் சாது

ஹரித்வார் அருகே உள்ள அமைதியான ஆசிரமம் ஒன்றில் ஆத்மபோதானந்த் என்ற சாமியார், கங்கை நதியை காப்பாற்ற 40வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

“நான் இறக்க தயாராக உள்ளேன். அப்படி பல தியாகங்களை செய்த வரலாறு எங்கள் ஆசிரமத்திற்கு உண்டு” என்கிறார் அவர்.

Advertisement

கேரளா மாநிலத்தை சேர்ந்த இவரின் வயது 26. கணிணி அறிவியல் படிப்பை பாதியில் விட்டுவிட்டார். கடந்த அக்டோபர் 24ஆம் தேதி முதல் உணவு எடுத்துக் கொள்வதை ஆத்மபோதானந்த் நிறுத்திக் கொண்டார். தற்போது, உப்பு மற்றும் தேன் கலந்த தண்ணீரில் மட்டுமே உயிர் வாழ்கிறார்.