Search
Search

கடலூர் சிறையில் இருந்து வெளியே வந்தார் சவுக்கு சங்கர்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

இதையடுத்து, அவர் சிறையில் இருந்து விடுதலையாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் பிரிவு காவல் துறையில் நிலுவையில் உள்ள 4 வழக்குகளில் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் எழும்பூர் நீதிமன்றம் 4 வழக்குகளில் இருந்தும் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மேலும் வழக்கு குறித்து வெளியில் எங்கும் பேசக்கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளது. இதையடுத்து, கடலூர் சிறையில் இருந்து சவுக்கு சங்கர் இன்று விடுவிக்கப்பட்டார்.

You May Also Like