மீண்டும் சர்ச்சையான நடுவர் முடிவு.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..!

இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த நிலையில் இந்தியா பேட்டிங் செய்யும் போது இங்கிலாந்து பவுலர் டாம் கரண் வீசிய பந்தை ஸ்ட்ரைக்கில் இருந்த ரிஷப் பன்ட் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்றுள்ளார்.

அந்த பந்தை ரிஷப் பண்ட் மிஸ் செய்தாததால் பந்து அவரது பேடில் பட்டுளதால், இங்கிலாந்து அணி அவுட்டிற்கு அப்பீல் செய்ய, அம்பயரும் உடனே அவுட் கொடுத்துள்ளார்.

Controversy erupts over umpire's decision 2nd ODI match

அந்த பந்து பவுண்டரி லைனை கடந்ததுள்ளது. உடனடியாக ரிஷப் பன்ட் DRS ரிவ்யு செய்தார். டாம் கரண் வீசிய பந்து பேட்டில் பட்டு எட்ஜ் ஆனது போல இருந்தது. ஆனால் ஸ்டம்பை தாக்கவில்லை என்று தெரிந்தது. உடனடியாக தேர்ட் ஆம்பியரிடம் இருந்து, பன்ட் அவுட் இல்லை என அறிவிக்கப்பட்டது.

ஆனால் களத்தில் இருந்த அம்பயர் அவுட் என சொன்னதால் அந்த பந்துக்கு ரன் கொடுக்கவில்லை. அதே நேரத்தில் டெட் பால் என சொல்லப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் இணையத்தில் கேள்விகள் கேட்டும், அம்பயரின் முடிவு குறித்தும் விவாதித்து வருகின்றனர்.