in

மனைவி கணவனிடம் மறைக்கும் விஷயங்கள் என்ன தெரியுமா?

ஒரு மனிதனின் வாழ்வில் திருமணம் என்பது மிக முக்கிய நிகழ்ச்சியாகும். திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின் என ஒரு மனிதனின் வாழ்க்கையையே பிரித்துவிடலாம்.

அவ்வாறு என்னதான் தனக்கு பிடித்தமாதிரி மிகவும் அழகான, அமைதியான வாழ்க்கை கிடைத்தாலும், சில பெண்கள் சில விஷயங்களை தனது கணவரிடம் இருந்து மறைக்கிறார்கள். அவற்றில் சில பொதுவான விஷயங்களை இப்போது பார்க்கலாம்.

relationship tips tamil

காதலன்

என்னதான் தனக்கு அன்பான, அழகான கணவன் கிடைத்தாலும், ஒரு பெண் கல்யாணத்துக்கு முன் ஒருவேளை அவர்கள் காதலித்து இருந்தால், அவரது காதலுடன் கணவரை ஒப்பிட்டு பார்ப்பார்களாம். இதனால் தங்கள் வாழ்க்கையில் பிரச்சனையை கொண்டு வரும் என்று தெரிந்திருந்தும், அவர்கள் இதனை செய்கிறார்கள். ஆனால் இது பற்றி அவரது கணவரிடம் கூறமாட்டார்கள்.

கணவரின் பெற்றோர்

திருமணத்திற்கு பிறகு எந்த பிரச்சினை வருகிறதோ இல்லையோ, மாமியார் மருமகள் பிரச்சனை வந்துவிடும். ஒரு சிலர் இந்த பிரச்சனையை பெரிதாக்கி பிரிந்து செல்வார்கள். ஒரு சிலர் இதனை பொறுத்துக்கொண்டு குடும்பத்துடன் வாழ்வார்கள். இவ்வாறு இருக்கும் பெண்கள் தன் கணவனிடம் இதைப்பற்றி கூறுவதில்லை.

வேலைக்கு செல்வது

பெரும்பாலான பெண்களுக்கு வேலைக்கு செல்வது பிடிக்கும். அது அவர்களின் உரிமையும் கூட, ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக அவர்களால் வேலைக்கு செல்ல இயலாது. இதனால் அவர்களது தனிப்பட்ட திறமை வளராமல், ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் நின்று விடுகிறது. இதனை ஒரு சில பெண்கள் எதிர்த்தாலும், ஒரு சிலர் இதனை குடும்பத்திற்காக ஏற்றுக்கொள்கின்றனர். இதுபற்றி கணவரிடமும் கூறுவதில்லை.

தாம்பத்தியம்

ஆய்வின்படி 10ல் 6 பெண்கள் மட்டும்தான் தாம்பத்தியத்தில் உச்சம் தொடுகிறார்கள். உச்சம் அடையாமல் இருப்பதால், அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். மேலும் இதுபற்றி தங்கள் கணவரிடம் வெளிப்படையாக பேசுவதில்லை. ஒருவேளை பேசினால் அவர்கள் மனம் புண்படும் என்று சிலர் விட்டுவிடுகின்றனர். இதனை அறிந்து கணவர்கள் நடப்பது நல்லது.

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் பொதுவான விஷயங்கள், இது பெண்ணுக்குப் பெண் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

LifeStyle
dharsha gupta instagram

Actress Dharsha Gupta Instagram Photos

தமிழ் மீம்ஸ்

Latest Tamil Memes 2020