மணமாலை தரும் சீவலப்பேரி துர்க்கை

சில பெண்களுக்கு திருமணம் தள்ளிக்கொண்டே போகும். திருமணம் கைகூட வேண்டுமென்று பரிகாரங்கள் செய்வார்கள். எளிதில் பலன் கிட்டாது. அப்படிப்பட்ட வர்கள், சீவலப்பேரி துர்க்கையை வழிபட்டால், கோள்களால் ஏற்படும் தடைகைள் நீங்கி, சீக்கிரமே கழுத்தில் மணமாலை குடும்ப பாக்கியம் பெறுவர் என்கிறார்கள்.

விஷ்ணுவுடன் துர்க்கை சக்தி வடிவங்களில் துர்க்கையும் ஒன்றாகும். வங்காளத்தில் காளியை துர்க்கை என்பார்கள். பொதுவாக துர்க்கை கொஞ்சம் உக்கிரத்துடன் காணப்படுவாள். ஆனால் சீவலப்பேரி தலத்தில் எழுந்தருளியுள்ள துர்க்காம்பிகை சாந்தமாக புன்சிரிப்புடன் காட்சி தருகிறாள்.

ஒரு கையில் சங்கு, மறு கையில் சக்கரம் சகிதமாக அமர்ந்து அருளை வாரி வழங்குகிறாள். இங்கு விஷ்ணுவர்தன் துர்க்கை ஒரே பீடத்தில் காணப்படுவது சிறப்பு. ராகுகால பூஜை சீவலப்பேரி துர்க்கையை சுற்றியுள்ள கிராமத்தினரும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் வந்து வணங்குகிறார்கள். வெள்ளிக்கிழமை காலை

10.30 மணி முதல் பகல் 12 மணி வரை உள்ள ராகு காலத்தில் பெண்கள் விரதமிருந்து, எலுமிச்சம்பழ தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறார்கள்.

திருமணம் ஆகாத, திருமணம் தள்ளிக்கொண்டே போகும் பெண்கள் விரதமிருந்து. இந்தக் கோயிலில் எலுமிச்சம்பழ தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டால் தடைகள் நீங்கி, திருமணம் சீக்கிரமாக நடந்து விடுகிறது என்பர். அப்படித் திருமணமான பெண்கள் தங்கள் கணவரோடு இங்கு வந்து நன்றிக்கடன் செய்து துர்க்கையை வணங்குவது வழக்கம்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 10.30 மணி முதல் பகல் 12 மணி வரை ராகுகால பூஜையும், கடைசி வெள்ளிக்கிழமை சிறப்பு ராகுகால பூஜையும் நடைபெறும். வெள்ளிதோறும் பூஜை முடிந்தவுடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

108 திருவிளக்கு ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று 108 திரு விளக்கு பூஜை நடைபெறுகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண் வந்து விளக்கு பூஜையில் பங்கு பெறுகிறார் கள். கோயிலில் நான்கு விழாக்கள் நடைபெறும் தை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் வருடாபிஷேசகமும் சித்திரை விஷ அன்று சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், தீபாரா தளைகள் செய்யப்படுகின்றன. அம்பாள் வீதி உலா வருவாள்.

ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் ‘ஆடிப்பூர லட்சார்ச்சளை’ விழா சிறப்பாக நடக்கும். நவராத்திரியை முன்னிட்டு 9 நாள் அம்பாள் உற்சவமூர்த்தி தர்பார் காஞ்சல் நடைபெறும். 8-ஆவது நாள் தூர்க்காஷ்டமி’ அன்று அம்பாள் விதியுலா உருவாள்.

கோபுரம்

அம்பாளுக்கு இராஜகோபுரம் கட்டி குடமுழுக்கு நடந்தது. 33 அடி உயரத்தில் இராஜகோபுரம் காட்சியளிக் கிறது. தியான மண்டபத்தில் அம்பாள் சிலை வெள்ளைக் கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை ஜெய்ப்பூரி லிருந்து கொண்டுவரப்பட்டது. அம்பாள் அருகில் மணி விளக்கு ஒன்று எப்போதும் சுடர்விட்டு வந்து கொண்டிருக்கிறது.

சனீஸ்வரர், தியானேஸ்வரருக்கு ஆலயங்கள் இங்கு சனீஸ்வர பகவானுக்கும், தியான கோலத்தில் சிவனுக்கும் தனியாக ஆலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இருப்பிடம்

திருநெல்வேலியிலிருந்து 17 கி.மீ. தூரத்தில் தாமிர வருணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அழகிய கிராமம் சீவலப்பேரி. இங்கு துர்க்கைக்கு கோயில் இருக்கிறது. சீவலப்பேரிக்கு திருநெல்வேலியில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

Recent Post