“செல்வராகவன் பராக்”.. குஷியில் ரசிகர்கள் – உருவாகும் “அந்த” ஹிட் படத்தின் Sequel!

செல்வராகவன், தன் சினிமா வழி கதை சொல்லி, நம்மை வேறு உலகத்திற்கு கொண்டுசெல்வம் வல்லமை படைத்த ஒரு இயக்குநர். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்த ஒரு மிகசிறந்த மனிதர்.
துவக்கம் முதலே இவருடைய படங்கள் தொடர் வெற்றியை பெற ஒரு காரணம் யுவன் சங்கர் ராஜ என்பதை நாம் நிச்சயம் பதிவு செய்திட வேண்டும். அந்த வகையில் செல்வாவின் படைப்பு ஒன்று தற்போது Sequel பெற உள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.
யுவன் மற்றும் செல்வராகவன் என்றால் டக்கென்று நம் நினைவில் வரும் திரைப்படம் 7G ரெயின்போ காலனி தான். ஆம் தற்போது அந்த படத்தின் தொடர்ச்சியாக ஒரு திரைப்படம் உருவாக உள்ளது. ஜூலை மாதம் இந்த படத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என்றும் கூறப்படுகிறது.
விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது, மேலும் அந்த படத்தில் நடித்த ரவி கிருஷ்ணா தான் இந்த படத்திலும் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்கவுள்ளார்.
மேலும் சோனியா அகர்வால் கதாபாத்திரத்தில் நடிக்க யாரை அணுகுவது என்றும் எண்ணிவருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை ரவி கிருஷ்ணாவின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான AM ரத்னம் தயாரிக்க உள்ளார். ஆயிரத்தில் ஒருவன் மற்றும் புதுப்பேட்டை போன்ற படங்களின் Sequel நிச்சயம் உருவாகும் என்றும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.