Search
Search

“அந்த பட” பணிகள் முடிந்தது.. மீண்டும் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு – Silver Bullet Sequence!

சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்பு மே மாதம் 9ம் தேதி 1996ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் இந்தியன். தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மைல் கல்லாக இந்த திரைப்படம் இன்றளவும் திகழ்ந்து வருகிறது. இரட்டை வேடங்களில் உலகநாயகன் கமல் கலக்கியிருந்த அந்த திரைப்படத்தை இயக்கியது பிரபல இயக்குநர் சங்கர்.

ஏ.ஆர் ரகுமான் இசையில், ஏ.எம் ரத்தினம் தயாரித்து வெளியிட்ட அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி கண்டது. இந்நிலையில் சுமார் 27 ஆண்டுகள் கழித்து அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

கடந்த சில வருடங்களாகவே இந்த படத்திற்கான பணிகள் நடந்து வந்த நிலையில், பல தடைகளை தாண்டி தற்பொழுது இந்த படபிடிப்பு நடந்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு சவுத் ஆப்பிரிக்காவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு முடிந்தது. அங்கு ரயிலில் நடப்பது போன்ற ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

மேலும் சங்கர் இயக்கத்தில், நடிகர் ராம் சரண் நடித்துவரும் கேம் சேஞ்சர் படத்திற்கு கிளைமாக்ஸ் காட்சிகளை படபிடிக்கும் பணியில் சங்கர் பிஸியாக இருந்த நிலையில், தற்பொழுது அந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ளது என்றும் மீண்டும் இந்தியன் 2 படபிடிப்பு துவங்க உள்ளது என்றும் அதிகாரப்பூர் அறிவிப்பை சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

You May Also Like