“சொன்ன தேதியில் படம் ரிலீஸ் ஆகும்” – சைலண்டாக ரெடியாகும் ஷாருகானின் ஜவான்!

கௌரி கான் தயாரிப்பில் பாலிவுட் உலகின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்து, உருவாகி வரும் திரைப்படம் தான் ஜவான். தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்த நமது இயக்குநர் அட்லி அவர்கள் இயக்கத்தில் அனிரூத் இசையில் இந்த படம் வெகு ஜோராக உருவாகி வருகிறது.
மேலும் இந்த திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் தீபிகா படுகோனே உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்த வருகின்றனர். இடையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் தடைபட்ட நிலையில் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி ஜவான் படத்திற்கான தனது பகுதியை ஷாருக்கான் நடித்த முடித்துள்ளதாகவும். விரைவில் அடுத்த கட்ட பணிகள் துவங்கும் என்றும் கூறப்படுகிறது. நிச்சயம் திட்டமிட்டபடி இந்த திரைப்படம் ஜூன் மாதம் இரண்டாம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதிக்குள் முடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.