கெளதம் மேனன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை?

சிம்பு – கெளதம் மேனன் கூட்டணியில் ’விண்ணைத்தாண்டி வருவாயா’ மற்றும் ’அச்சம் என்பது மடமையடா’ ஆகிய இரண்டு படங்கள் வெளிவந்தன. இதனையடுத்து தற்போது மூன்றாவது முறையாக இணைய உள்ளனர்.

இந்த படத்திற்கு ’நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற டைட்டில் வைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் இந்த படத்தை தயாரிக்கிறது. படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Cinema News

சிம்பு ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சனோன் என்ற பாலிவுட் நடிகை நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை. நடிகை கீர்த்தி சனோன் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

Advertisement