இந்தியாவின் கடைசி மன்னர் உடல் நலக்குறைவால் காலமானார்.

நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீன்தார் டிஎன்எஸ் முருகதாஸ் தீரத்தபதி உடல் நலக்குறைவால் நேற்று இரவு 9.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 89. இவருக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.

தமிழகத்தில் மிகவும் பழமையானது சிங்கம்பட்டி ஜமீன். கி.பி.1100 ஆம் ஆண்டில் உருவான இந்த சமஸ்தானத்தின் 31 ஆவது பட்டத்தை தனது மூன்றரை வயதில் பெற்றவர் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி.

அம்பாசமுத்திரத்தில் அரசு பொது மருத்துவமனை, அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவை கட்டுவதற்கு சிங்கம்பட்டி ஜமீன் சார்பில் இலவசமாக இடம் வழங்கப்பட்டுள்ளதால் தீர்த்தபதி என்ற பெயரிலேயே செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement