பிரபல பாடகி சங்கீதா சஜித் திடீர் மரணம்..!

தமிழ், தெலுங்கு கன்னடம் மலையாளம் என 200க்கும் மேற்பட்ட சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய பிரபல பின்னணி பாடகி சங்கீதா சஜித் இன்று காலமானார். அவருக்கு வயது 46.

கேரளாவைச் மாநிலத்தை சேர்ந்தவர் பாடகி சங்கீதா சஜித். தமிழில் மிஸ்டர் ரோமியா படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இடம்பெற்ற ’தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை’ உட்பட பல்வேறு ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். முன்னணி இசை அமைப்பாளர்கள் மற்றும் பாடகர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

Advertisement

கடந்த சில மாதங்களாக சிறுநீரகப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த அவர், திருவனந்தபுரத்தில் உள்ள தன் சகோதரி வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று (22.05.2022) அவர் மரணமடைந்தார். இசைக்கலைஞர்கள் ரசிகர்கள் என பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.