ஊர்: சீர்காழி
மாவட்டம் : நாகப்பட்டினம்
மாநிலம் : தமிழ்நாடு
மூலவர் : திருவிக்கிரம நாராயணர்
தாயார் : லோகநாயகி
தீர்த்தம் : அமிர்த தீர்த்தம்
சிறப்பு திருவிழாக்கள் : வைகாசி மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம்
திறக்கும் நேரம் : காலை 7:30 மணி முதல் 11:00மணி வரை, மாலை 4:30மணி முதல் இரவு 8:00மணி வரை.
தல வரலாறு
பல யுகங்கள் வாழும்படி சாகா வரம் பெற்றிருந்த பிரம்மன் மனதில் கர்வம் ஏற்பட்டு தன் பணியை சரிவர செய்யவில்லை. இதனிடையே உரோமச முனிவர் மகாவிஷ்ணுவை வாமன அவதாரத்தில் காண இத்தலத்தில் தவமிருந்தார் அவரின் தவத்தை மெச்சி மகாவிஷ்ணு தன் இடக் காலை தூக்கி திரிவிக்கிரம அவதாரத்தை தரிசனம் தந்தார்.
இந்த “ஏகாந்த நிலையை தரிசித்த நீங்கள் சிறப்பான நிலையை பெற்று, பிரம்மனை விட கூடுதலான ஆயுட்காலமும் மற்றும் உமது ரோமங்களில் ஒன்று உதிர்ந்தாலும் பிரம்மனின் ஆயுட்காலம் ஒரு வருடம் முடியும் என்று கூறி திருவிக்ரமனாக எழுந்தருளினார். இதைக்கேட்ட பிரம்மனின் ஆணவம் அழிய பெற்றது.
பெருமாளின் 108 திருப்பதிகளில் இது 28வது திவ்ய தேசம். இடதுகாலை தலைக்குமேல் தூக்கி வலக்கையை தானம் பெற்ற விதத்தில் இடக்கையில் ஒரு விரலை நீட்டி இன்னும் ஒரு அடி எங்கே? என கேட்டவாறு திருவிக்ரமனாக காட்சி தருகிறார். இவர் இங்கு சாளக்கிராம மாலை அணிந்து சங்கு சக்கரத்துடன் சாய்ந்தபடி உள்ளார். வைகுண்ட ஏகாதேசி ஒருநாள் மட்டுமே இங்கு தரிசனம். இவருக்கு “தவிட்டுப்பானை தாடாளன’ என்ற பெயரும் உண்டு.
இவரது திருவடியால் மூவுலகையும் அளந்ததால் ஆண்டாள் இவருக்கு “தாடாளன்’என பெயரிட்டார். அனைத்து பெருமாள் கோயில்களிலும் திருமால் மார்பில் மகாலட்சுமி வாசம் செய்வாள். ஆனால் இங்கு லோகநாயகியான தாயார் மார்பில் திருவிக்கிரமனை தாங்கியபடி உள்ளார். சிவ தொண்டு செய்த திருஞானசம்பந்தர் இத்தலத்தில் பிறந்தார். திருஞான சம்பந்தர் மற்றும் திருமங்கை ஆழ்வாருக்கும் நடந்த குறல் போட்டியில் திருமங்கையாழ்வார் தாடாளனை வணங்கி, வாதத்தில் வென்றார். திருஞானசம்பந்தர், திருமங்கையாழ்வாரை பாராட்டி, அவர் வைத்திருந்த வேலை பரிசாக கொடுத்து காலில் தண்டையும் அணிவித்தார்.