வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் கீரைகளில் இந்த சிறு கீரையும் ஒன்று. சுமார் இருபது செ.மீ உயரம் வரை வளரக்கூடியது. இக்கீரை மெல்லிய தோற்றமுடையது. இக்கீரை மருந்துகளின் வீரியத்தை குறைக்க கூடியது.
நார்ச்சத்து நிறைந்துள்ள கீரைகளில் சிறுகீரையும் ஒன்று. இதன் காரணமாக இதை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் உணவு நன்றாக செரிமானம் ஆக உதவுகிறது. இதனால், தீவிரமான மூலம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கிறது.
இந்த கீரையில் சுண்ணாம்புசத்து, இரும்புசத்து, நீர்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்பு, மாவுசத்து, வைட்டமின் ஏ, பி, சி ஆகிய சத்துகள் அடங்கியுள்ளன.
சிறுகீரை பொரியலுடன் திணை அரிசி சாதம் பட்டாணி அல்லது கொண்டைக்கடலை சேர்த்து மதிய உணவாக சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் முற்றிலும் குணமாகும் மேலும் அதிக ரத்த அழுத்தமும் குணமாகும்
ஓட்ஸ் கஞ்சி அல்லது பார்லி தண்ணீருடன் சிறு கீரை பொரியலை சேர்த்து சாப்பிடவேண்டும் இவ்வாறு சாப்பிட்டு வந்தால் கல்லீரல் கோளாறு மஞ்சள்காமாலை குணமாகும்
இந்தக் கீரையில் இரும்புச்சத்து தாராளமாக இருப்பதால் ரத்தத்தில் உள்ள நச்சு கழிவுகள் வெளியேறும். ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளும் ரத்தசோகையைத் தடுக்கும்.
சிறு கீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்து உடலில் தேய்த்துக்கொண்டால் சொரி , சிரங்கு , படை போன்ற தோல் நோய்கள் குணமாகும்.
உடலில் ரத்த காயங்கள் ஏற்பட்டால், இக்கிரையை காயங்களில் வைத்து கட்டினால் கிருமி தோற்று ஏற்படுவதையும் தடுத்து காயங்களை சீக்கிரம் ஆற வைக்கிறது.
சிறுகீரையுடன் துவரம்பருப்பும், வெங்காயம் சேர்த்து இந்தக் கீரையை நெய்யில் வதக்கிக் கடைந்து, தொடர்ச்சியாக 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், உடல் வலிமை பெறும்.
சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்கவும், சிறுநீரகம், சிறுநீர்ப்பை போனற உறுப்புகளை பாதுகாக்கிறது. வாரம் ஒருமுறை சிறுகீரை சமைத்து சாப்பிடுவது சிறுநீரகங்களுக்கு நல்லது.
சிறுகீரையில் ஆண்களின் உயிரணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இதனால் ஆண்களுக்கு விந்தணுக்கள் உருவாகி மலட்டுத்தன்மை நீங்கும்.
சிறுகீரையில் வைட்டமின் எ சத்து அதிகம் இருப்பதால், கண்களில் கண்புரை உருவாதை தடுக்கிறது. மேலும் விழிப்படலம், கருவிழி ஆகியற்றின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
எச்சரிக்கை
இரவில் கீரை சாப்பிடவே கூடாது. ஏனென்றால், கீரைகளில், நார்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால், எளிதில் செரிமானம் ஆகாது.
கீரையுடன் முட்டை, பால், தயிர், அசைவம் போன்றவற்றை சேர்த்து சமைக்கக்கூடாது. ஏனென்றால், இவை ஒன்றாக சேர்ந்தால் மலச்சிக்கலையும், வயிற்றுப் பிரச்னைகளையும் உருவாக்கும்.