அமர்ந்து கொண்டே தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்..!

வீட்டில் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து வேலை செய்து கொண்டிருக்கும்போது நாம் அந்த டேபிளில் தலை வைத்தபடி தூங்கி விடுவோம். குறிப்பாக பள்ளிநாட்களில் பெஞ்சின்மீது படுத்து தூங்காதவர்கள் இருக்கமுடியாது.
தூங்கும்போது சுகமாக இருந்தாலும் எழுந்த பிறகு முதுகு வலி, கழுத்து மற்றும் தோள் பட்டைகளில் பிடிப்பு ஏற்படும். அதற்கு காரணம் நீண்ட நேரம் அசைவற்று இருந்தது தான்.

நேராக படுத்து உறங்கும் போது உடலில் ரத்த ஓட்டம் சீராகும். மேலும் உடலுக்கு போதுமான அசைவு கிடைக்கும். உடல் அசைவற்று இருப்பது மூட்டுபிடிப்பை ஏற்படுத்துவதோடு மிகுந்த வலியையும் கொடுக்கும்.
அமர்ந்து கொண்டே தூங்குவது உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மேலும் நரம்புகளில் ரத்தம் உறைந்து கட்டிகள் உருவாகும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக நாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்தபடி கால்களை கீழே தொங்க விட்டு தூங்குவதால் கால்களில் ரத்த உறைவு ஏற்படும் எனக் கூறுகின்றனர்.